61 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்ட 24 வயது இளைஞன்!

அமெரிக்காவில் 61 வயது பாட்டியை காதலித்து 24 வயது இளைஞன் திருமணம் செய்த நிலையில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தம்பதி மனம் திறந்துள்ளனர்.

குரான் மேக்கேன் (24) என்பவரும், செரில் மெக்ரிகர் (61) என்ற பெண்ணும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் கதை சுவாரசியமானது.

கடந்த 2012ல் 15 வயதாக இருக்கும் போது முதன் முதலில் செரிலை மேக்கேன் உணவகத்தில் பார்த்துள்ளார். அந்த வயதில் மேக்கேனுக்கு எந்தவொரு காதலும் வரவில்லை. பின்னர் 2020ல் மீண்டும் இருவரும் சந்தித்து கொண்டு நெருங்கிய நட்பானார்கள்.

பின்னர் டிக் டாக்கில் இருவரும் சேர்த்து வீடியோ வெளியிட பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி செரிலுக்கு £2,200 மதிப்பிலான மோதிரத்தை அணிவித்து மேக்கேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.

தன்னை விட 37 வயது குறைவான இளைஞனின் காதலை செரில் ஏற்று கொண்டார். இதையடுத்து சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர், திருமணத்தின் போது வயதான நபர் போல சிகை அலங்காரத்தை மேக்கேன் மாற்றி கொண்டார்.

தம்பதி பேசுகையில், இது முதல் பார்வையில் ஏற்பட்ட காதல் கிடையாது, நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பின்னரே விரும்பினோம். எங்கள் வயது வித்தியாசத்தை கிண்டல் செய்து பலரும் பதிவிட்டனர், அதை பற்றி கவலையில்லை.

ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்துள்ளோம், எங்களின் தனிப்பட்ட தாம்பத்ய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் வெறுத்து கொள்ளுங்கள், நாங்களும் அனைவரையும் போல சாதாரண வாழ்க்கையே வாழ்வோம் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *