படிக்க சென்ற சிறுவனை விடிய விடிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவி!

படிப்பதற்காக சென்ற 15வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உயர்தரத்தில் கல்வி கற்று வரும் 18வயது மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி ஆபாச வலை தளங்களிற்கு அடிமையாகியதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தெரியவருவதாவது

திக்வெல்ல  பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி  கற்கும் 18 வயது மாணவி ஒருவரே இச்சம்பவத்தில் ஈடுபட்டார்.
இணைய வழி ஊடாக முன்னெடுக்கப்படும் கற்கையில் ஈடுபட்ட மாணவி, வயது வந்தோர் தளங்களிலுள்ள வீடியோக்களை பார்த்து உடலுறவில் வெறி கொண்டார்.

ஊரடங்கு முடிந்த கையோடு மீள பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது, ஆண் நண்பர் ஒருவரை உருவாக்கி, அவருடன் பாலுறவில் ஈடுபடும் எதிர்பார்ப்பில் இருந்து வந்துள்ளார். எனினும், பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது, பிற்போடப்பட்டு வருவதனால் மனது கட்டுகடங்காமல் கொந்தளித்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள 15 வயது சிறுவனின் வீட்டினரும் மாணவியின் வீட்டினரும் நெருங்கிய உறவினர்கள் போல பழகி வந்துள்ளனர்.

சிறுவனின் வீட்டுக்கு சென்ற மாணவி, 15 வயது சிறுவனை தனது வீட்டிற்கு கல்வி கற்க வருமாறு கூறியுள்ளார். அன்று இரவு மாணவியின் வீட்டிற்கு கல்வி கற்பதற்காக சிறுவன்  சென்றுள்ளார்.

இருவரும் சகோதரர்கள் போல பழகுவதனால், பெற்றோர் அவர்களை நுணுக்கமாக கவனிக்கவில்லை. இரவு வரை கல்வி கற்ற பின், அன்றிரவு தன்னுடைய அறையிலேயே மாணவனை தங்க வைத்துள்ளார் மாணவி.

வீட்டில் எல்லோரும் உறங்கிய பின், மாணவி பார்த்த ஆபாச காணொளிகளில் இடம்பெறும் காட்சிகளை போல செயற்பட்டுள்ளார்.

15வயது சிறுவன் அதற்கு இடமளிக்காத நிலையில், மாணவி வலுகட்டாயமாக அவரை இதில் ஈடுபடுத்தியுள்ளார்.

காலை விடிந்ததும், சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தன்னுடைய  தாயிடம் தெரிவித்தார். தாயார் திக்வெல்ல பொலிஸ் நிலையம் சென்று  முறைப்பாடு செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *