நியூசிலாந்து அணிக்கு மிரட்டல் மின்னஞ்சல் இந்தியாவிலிருந்து அனுப்பட்டுள்ளது!

பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்திரி, “பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் மின்னஞ்சல் இந்தியாவில் இருந்து வந்துள்ளது” என குற்றம் சுமத்தியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்த நிலையில் அந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே பாதுகாப்பு காரணங்களை கருதி தொடரை நியூசிலாந்து ரத்து செய்து. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த மின்னஞ்சல் இந்தியாவின் தொலைத்தொடர்பு சாதனத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. ProtonMail தளத்திலிருந்து VPN மூலமாக அது அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் போலியான ஐடி-யை பயன்படுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு பின்னால் உலக நாடுகளின் சதி இருப்பதாக சந்தேகிப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தை தொடர்ந்து இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *