சர்வதேச விளையாட்டுப் போட்டியில் சீனா கொரோனாவை பரப்பியதாக சீன நாட்டவர் குற்றச்சாட்டு!

உலகம் கொரோனாவைக் குறித்து அறிந்துகொள்வதற்கு இரண்டு மாதங்கள் முன்பே, சீனாவின் வுஹானில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் வேண்டுமென்றே கொரோனா பரப்பட்டது என அதிரடியான ஒரு தகவலை போட்டு உடைத்துள்ளார் சீன நாட்டவர் ஒருவர்.

முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரான Wei Jingsheng என்பவர்தான் இந்த அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் நடத்தப்பட்ட உலக இராணுவ விளையாட்டுப்போட்டிதான் முதன்முதலில் கொரோனா பரவகாரணமாக இருந்த superspreader நிகழ்ச்சி என்று கூறியுள்ளார் Jingsheng.

அந்த போட்டியில், வேண்டுமென்றே சீனா கொரோனா வைரஸை பரப்பியது என அதிரடியான தகவல் ஒன்றைக் கூறுகிறார் Jingsheng.

அந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக சீனா வந்திருந்த 9,000 சர்வதேச விளையாட்டு வீரர்கள், மர்ம நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அது ஒன்றும் தற்செயலாக நடந்த விடயம் அல்ல என்கிறார் அவர்.

அந்த இராணுவ விளையாட்டுப் போட்டிகளின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வருவார்கள் என்பதால், சீன அரசு அதை கொரோனா வைரஸைப் பரப்புவதற்கு உகந்த தருணமாக பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என தான் கருதுவதாக அவர் தெரிவிக்கிறார்.

அந்த நேரத்தில் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சோதனைகளை சீனா செய்துகொண்டிருந்தது குறித்து தனக்கு தெரியும் என்று கூறியுள்ள Jingsheng, அவற்றை சீனா பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.

அவரது கூற்றுக்களை அமெரிக்க மாகாணத் துறைக்கான முன்னாள் சீன ஆலோசகரான Miles Yu என்பவரும் ஆமோதிக்கிறார்.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் அந்த விளையாட்டுப் போட்டிகளின்போது சுகவீனம் அடைந்ததாகவும், கொரோனா போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு காணப்பட்டும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் கூறுகிறார் Miles Yu.

மேலும், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே தான் அக்கறை எடுத்து ட்ரம்ப் அரசிலிருந்த மூத்த அதிகாரிகளிடம் இது குறித்து விவரித்தும், தனது கூற்றுகளை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார் Jingsheng.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *