ஜனாதிபதியின் பாரியார் சொந்த செலவில் அமெரிக்கா சென்றுள்ளார்!

அமெரிக்க தலைநகரான நிவ்யோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச் செப்டம்பர் 18 ஆம் திகதி அமெரிக்கா நோக்கி புறப்பட்டார்.ஜனாதிபதியுடன் அவரின் பாரியாரும் சென்றிருந்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் அரச செலவில், உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், ஜனாதிபதியின் பாரியார் தனிப்பட்ட ரீதியில் கட்டணம் செலுத்தியே அவர்களுடன் சென்றுள்ளார்.

அமெரிக்க பயணத்தின்போது அங்குள்ள தனது மகன், மருமகள் மற்றும் பேரபிள்ளைகளை சந்தித்து, அவர்களுடன் நேரத்தை கழிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாரியார் திட்டமிட்டுள்ளார்.

அரசமுறை பயணம் மேற்கொண்டு குடும்ப உறுப்பினர்களை சந்தித்தால், அது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழக்கூடும் என்பதால் அதனை தவிர்க்கும் நோக்கில்கூட, தனிப்பட்ட ரீதியில் கட்டணம் செலுத்தி அமெரிக்கா செல்லும் முடிவை ஜனாதிபதியின் பாரியார் எடுத்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகின்றது.

அதேபோல முதன்மைப் பெண்ணுக்கான வரப்பிரதாசங்களைக்கூட ஜனாதிபதியின் பாரியார் அனுபவிப்பதில்லை எனவும், மிகவும் எளிமையானதொரு வாழ்க்கையையே அவர் வாழ்கின்றார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *