நான்கு பேரை கொலை செய்தவர் தாயின் காதலன் என கண்டுபிடிப்பு!

இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் நான்கு பேர்கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலை செய்தவன் அந்த பிள்ளைகளின் தாயின் காதலன்தான் என தெரியவந்துள்ளது.

Derbyshireஇலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, Terri Harris (35) என்ற பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவர், அந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் தோழி என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு ஆண் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நான்கு மணி நேரப் பயணத்துக்குப்பின் வீடு திரும்பிய அந்த குழந்தைகள் இருவரின் தந்தையான Jason Bennett சமூக ஊடகங்களில் தன் பிள்ளைகளை நினைத்து வெளியிட்ட மனதை உருக்கும் செய்திகளிலிருந்து, உயிரிழந்த குழந்தைகளின் பெயர் John (13) மற்றும் Lacy (11) என தெரியவந்தது.

உண்மை என்னவென்றால், Jasonம் அவரது மனைவியான Terri Harrisம் பிரிந்திருக்கிறார்கள். பிள்ளைகள் John மற்றும் Lacy தங்கள் தாயான Terriயுடன் வாழ்ந்துவந்த நிலையில், Terri, Damien Bendall (31) என்ற நபரை காதலித்திருக்கிறார். தற்போது அந்த Damienதான் Terriயையும் குழந்தைகள் John மற்றும் Lacyயையும், Lacyயின் தோழியான Connie Gent (11)ஐயும் கொலை செய்திருக்கிறான்.

Connie தன் தோழி வீட்டில் விளையாடிவிட்டு அங்கேயே தங்கியிருந்தபோது, அவளையும் சேர்த்து கொலை செய்திருக்கிறான் Damien. John மற்றும் Lacyயின் தந்தை ஒரு பக்கம் கதற, இன்னொரு பக்கம், அவர்கள் வீட்டுக்கு விளையாடப்போய் அநியாயமாக கொல்லப்பட்ட Connieயின் தந்தை தன் மகளை பறிகொடுத்துவிட்டு கதறுகிறார்.

இதற்கிடையில், Damien ஏன் Terriயையும் குழந்தைகளையும் கொலை செய்தான், எப்படி கொலை செய்தான் என்பதுபோன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *