8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்ததாக தாய் வாக்குமூலம்!

அமெரிக்காவில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மகன் இறந்துகொண்டிருந்த நேரத்தில், தாய் உடலுறவில் பிசியாக இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் கடந்த மார்ச் 23-ஆம் திகதி Keyontae Holzendorf எனும் 8 வயது சிறுவன் இறந்து கிடந்தான்.

தகவல் கொடுக்கப்பட்டு ஹோட்டலுக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் இறந்துகிடந்த சிறுவனின் உடலை பார்த்துள்ளனர். அவனது தலை, கழுத்து, வயிறு என உடல் முழுவதும் பல இடங்களில் பட்டை பட்டையாக பெல்ட்டால் அடிக்கப்பட்ட மற்றும் கடுமையான காயங்கள் காணப்பட்டன.

அதே ஹோட்டல் அறையில் இருந்த சிறுவனின் தாய் Kayla Holzendorf-யிடம் மகனின் மரணம் குறித்து விசாரிக்கப்பட்டது. ஆனால் என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என அவர் ககூறினார்

அதன் பிறகு, சந்தேகத்தின் அடிப்படையில் Kayla-வை கைது செய்தனர். அதே அறையில் இருந்த அவருடைய காதலன் (common-law partner) Dominique Lewis என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

பிறகு சிறுவனின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைத்த பொலிஸார், சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் சிறுவனின் மருத்துவ சோதனை முடிவுகள் வெளியானது. அதில் சிறுவனின் பற்கள் உடைக்கப்பட்டு, கணுக்கால்களில் பல முறை அடிக்கப்பட்டு, உடலில் அங்கங்கு மேல்தோல் இல்லாமல் பயங்கரமாக துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், Kayla-வை விசாரிக்கும்போது அவர் கொடுத்த பதில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் தனது மகனை குளிக்க அனுப்பிவைத்ததாகவும், அதன் பின்னர் அவர் தனது காதலன் Dominique-உடன் தனியறையில் உறவில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

பிறகு வந்து பார்க்கும்போது மகன் இறந்து கிடந்ததாகவும், வேறு எதுவும் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும், மகனின் உடலில் இருந்த காயங்கள் குறித்து கேட்டபோது, அது அவன் சைக்கிள் ஒட்டி பழகும்போது கீழே விழுந்து அடிபட்ட காயங்கள் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு டெக்சாஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுவனின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை கூடிய விரைவில் வெளிக்கொண்டுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *