அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தும் அரசாங்கம்!

அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் பயன்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு குரல் கொடுக்கும் கத்தோலிக்க ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க சமூகத்தினரிடையே அரசாங்கம் பொய்யான கூற்றுகளை பரப்புகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பான 22 தொகுதிகளில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
தாக்குதல்களின் ஆதாரங்களைக் கொண்ட 23 தொகுதிகளில் ஒன்றை மாத்திரமே அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கு பதிலாக, அவர் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியில், சேறுபூசும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *