தங்கத்தின் விலை பலத்த சரிவில் அடுத்த வாரம் மேலும் சரியலாம்!

தங்கத்தின் விலை இன்று சர்வதேச சந்தையில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்தினை கண்டாலும், வார இறுதியில் பலத்த சரிவினைக் கண்டது.

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது வரும் வாரத்திலும் இதேபோன்று சரியலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இன்று இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம் – Gold Price Today in Sri Lanka

தங்கத்தின் விலையானது தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்பட்ட 1780 டாலர்களை உடைத்து, அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலான 1760 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது.

இதன் காரணமாக அடுத்த வாரமும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மேற்கொண்டு சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

கடந்த வாரத்தின் ஆரம்ப நாட்களில் தங்கம் விலை சற்று அதிகரித்தாலும், கடந்த வாரத்தின் பிந்தைய நாட்களில் நல்ல சரிவினைக் கண்டது.

கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை 1789.80 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 1810.60 டாலர்களை தொட்டது.

இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1745.50 டாலர்களையும் தொட்டது.

வெள்ளிக்கிழமையன்று முடிவில் தங்கம் விலையானது சற்றே ஏற்றம் கண்டு 1753.95 டாலர்களாக முடிவடைந்தது. இது ஒரு வாரத்தில் 35 டாலர்களுக்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.

வௌ்ளி விலை நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் பலத்த சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 23.790 டாலர்களாக தொடங்கிய நிலையில், இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 24.000 டாலர் வரையில் சென்றது.

வெள்ளிக் கிழமையன்று குறைந்த பட்சமாக 22.305 டாலர்கள் வரையிலும் சென்று, முடிவில் 22.358 டாலர்களாக முடிவுற்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *