உலகம் முழுவதும் வெற்றிப் பாடலாக மாறியுள்ள சிங்கள பாடல்!

மெனிகே மகே ஹித்தே என்ற பாடலை 100 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு கடல் கடந்து புகழ் உச்சம் தொட்டுள்ளது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் இந்தப் பாடலுக்கு பெரும் ஆதரவு கிடைக்கப்பெற்று வருகின்றது. உலகின் பலரும் இந்தப் பாடலை ரசித்து தங்களது வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் யூடியூப்பில் இந்தப் பாடலை இதுவரையில் 100 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.இலங்கைப் பாடல் ஒன்று இந்தளவு பேர் பார்வையிட்டது இதுவே முதல் தடவையாகும்.

யூடியூபில் இந்த பாடல் வெளியாகி 4 மாதங்களில் 110 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் முதல் இன்ஸ்டாகிராமர்கள் வரை அனைவரும் இந்த பாடலின் ரசிகர்களாகியுள்ளார்கள். அவர்களில் சிலர் தங்கள் வீடியோக்களில் பாடலை பின்னணி இசையாகக் கொண்டுள்ளனர், சிலர் அதற்கு நடனமாடியுள்ளனர், ஏனையவர்கள் வெறுமனே டியூன் செய்துள்ளனர்.

வைரலான சிங்களப் பாடலின் தற்போதைய பதிப்பு கடந்த மே வெளியிடப்பட்டது. இலங்கை ரப் பாடகர்கள் யொஹானி மற்றும் சதீஷன் ஆகியோரால் பாடப்பட்டது. அவர்கள் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார்கள்.

குறித்த பாடல் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில்,

இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாசாரத்தூதுவர் யொகானி திலோக்கா டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட ‘மெனிகே மகேஹிதே’ பாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பலமில்லியன் மக்களின் இதயங்களைக்கவர்ந்துள்ளது.

இது,பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின் ஆழத்தை, பிரதிபலிக்கின்றது என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *