பிஞ்சு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் ஐவர் சடலமாக மீட்பு வெளிவரும் பின்னணி!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் குடியிருப்பு ஒன்றில் பிஞ்சு குழந்தை உட்பட ஐவரை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மாகடி சேதன் பகுதியில் வாடகை குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சங்கர் என்பவரின் மனைவி பாரதி(51), இவரது மகள் சிஞ்சனா(34), சிந்துராணி(34), இவரது மகன் மதுசாகர்(25) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இவர்களுடன் 9 மாத குழந்தை பசியால் இறந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. மேலும், சடலங்களுடன் சுயநினைவை இழந்த நிலையில் இரண்டரை வயதுள்ள சிறுமி ஒருவரையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

தற்போது அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சொத்து மீதான தகராறு காரணமாகவே இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பாரதியின் கணவர் சங்கர் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்த நிலையில் தமது மனைவி உள்ளிட்டவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் குடியிருப்பில் எவரும் அழைப்பை ஏற்காத நிலையில் அவர் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையிலேயே மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்டது அவருக்கு தெரிய வந்தது. தற்போது இந்த வழக்கை பொலிசார் தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *