சுயாதீனமாக செயற்பட முடியவில்லை பதவி விலகுவதாக குணவர்தன அறிவிப்பு!

சுயாதீனமாக செயற்பட முடியவில்லை என தெரிவித்து நுகர்வோர் சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் துசான் குணவர்தன பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

நுகர்வோர் சேவை தொடர்பான ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவிடம் தமது பதவி விலகல் கடிதத்தை அவர் எதிர்வரும் செவ்வாய் கிழமை ஒப்படைக்க உள்ளார்.
தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வரும் அரசியல் அழுத்தங்களினால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமான முறையில் கடமைகளை முன்னெடுக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளைப்பூண்டு இரண்டு கொள்கலன்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பங்களினால் தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பதவி விலகுமாறு பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் காரணமாக தாம் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

சீனி, கோதுமை மா மற்றும் உழுந்து போன்ற பல்வேறு பொருட்கள் இவ்வாறு மோசடியாக முறையில் வெளிப்பாதையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட வெள்ளைப்பூண்டு வேறும் ஒர் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதுடன் அதனையே மீண்டும் சதொச நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டமை அரசியல் ரீதியான நியமனம் என்ற போதிலும் மக்களுக்கு சேவையாற்ற முயற்சித்ததாகவும் அதற்கு அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *