தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி!

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாகவும், முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொடி மற்றும் தனது படத்தை மக்கள் இயக்க நிர்வாகிகள் பயன்படுத்த விஜய் அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *