விமான தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது!

அமெரிக்க படையினர் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்கு சில நாட்களிற்கு முன்னர் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 29 ம் திகதி  இடம்பெற்ற ஆளி;ல்லா விமானதாக்குதலில் மனிதாபிமான பணியாளர் ஒருவரும் அவரது ஏழு குழந்தைகள் உட்பட குடும்பத்தவர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை பீடம் தெரிவித்துள்ளது.

இரண்டு வயது குழந்தையும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது.

காபுல் விமானநிலைய தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றது.
தலிபான் காபுலை கைப்பற்றியதை தொடர்ந்து அமெரிக்க படையினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இந்தத் தாக்குதல் இடம்பெற்றது.

ஆப்கான் மீதான அமெரிக்க இராணுவத்தின் 20 நடவடிக்கை முடிவிற்கு வருவதற்கு முன்னர் இறுதியாக இடம்பெற்ற இந்த தாக்குதல் இது.

மனிதாபிமான பணியாளர் ஒருவரின் காரை எட்டு மணித்தியாலங்கள் கண்காணித்த அமெரிக்க புலனாய்வு பிரிவினர் அது ஐஎஸ் கே அமைப்பிற்குரியது என கருதினார்கள் என அமெரிக்க மத்திய கட்டளை பீடத்தின் ஜெனரல் கென்னத் மக்கன்சி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்கே அமைப்பின் உறுப்பினர் ஒருவர் வசிக்கும் பகுதியில் மனிதாபிமான பணியாளரின் கார் காணப்பட்டது அதன் நடமாட்டமும் ஏனைய புலனாய்வு தகவல்களும் காபுல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்ற முடிவிற்கு வருவதற்கு காரணமாக அமைந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

ஜமைரி அஹமடி என்ற மனிதாபிமான பணியாளர் தனது காரை செலுத்த தொடங்கியதும் இந்த அமெரிக்க தாக்குதல் இடம்பெற்றது.

முதல் வெடிப்பை தொடர்ந்து இரண்டாவதுவெடிப்பும் இடம்பெற்றது – இதன் காரணமாக அந்த வாகனத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

எனினும் மற்றொரு எண்ணெய் லொறி வெடித்தமையே இதற்கு காரணம் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது அமெரிக்கப் படையினருக்கு மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இது தந்திரோபாய தவறு என அமெரிக்க இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *