மூன்று பெண் குழந்தைகள் கொடூரமாக கொன்ற தாய் அதிரவைக்கும் சம்பவம்!

தென்னாப்பிரிக்காவில் இருந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக நியூஸிலாந்துக்கு குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் தனது 3 பெண் குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 40 வயது லாரன் டிக்காசன் (Lauren Dickason), தனது கணவர் கிரஹாம் டிக்காசன் (Graham Dickason), அவர்களது 2 வயது இரட்டை பெண் குழந்தைகளான மாயா மற்றும் கார்லா மற்றும் அவர்களின் 6 வயது சகோதரி லியானே ஆகியோருடன் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் திகதி நியூசிலாந்துக்கு வந்தனர்.

மருத்துவரான லாரன் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான அவரது கணவர் கிரஹாம் இருவரும் நியூஸிலாந்துக்கு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கி அங்கேயே குடியேறும் நோக்கத்தில் வந்தனர்.

நாட்டிற்குள் நுழைந்த அவர்கள், கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு 14 நாட்களுக்கு ஹோட்டல் அறையில் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதன்பிறகு, கேன்டர்பரி பிராந்தியத்தில் திமருவில் உள்ள ஒரு வீட்டிற்கு குடியேறினர். அனால், அதன்பிறகு நடந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் சிதைத்தது.

வீட்டிற்கு வந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், வியாழக்கிழமை, அந்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக, அங்கு எதோ தவறாக நடப்பதாக அக்கம்பக்கத்தினர் இரவு 9.30 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

பொலிஸார் வந்து பார்க்கும்போது அந்த வீட்டில் 3 பெண் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். மேலும் அங்கு இயல்பு நிலையில் இல்லாத லாரன் டிக்காசனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

10 மணியளவில் வேலையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய கிரஹாம் டிக்காசன், வீட்டில் தனது மூன்று குழந்தைகளும் இறந்துகிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
மூன்று குழந்தைகளையும் லாரன் டிக்காசன் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து, வெள்ளிகிழமை அவரை பொலிஸார் கைது செய்தனர்.

புதிய வாழ்க்கையை தொடங்கும் நோக்கில் நியூஸிலாந்துக்கு வந்து, சில நாட்களில் அங்கு என்ன நடந்தது? ஏன் பெற்ற தாயே தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்தார்? என்பது குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *