புற்றுநோய் ஆபத்து மொத்த மருந்தையும் திரும்பப்பெறும் பைசர் நிறுவனம்!

பைசர் நிறுவனத்தின் மிகப் பிரபலமான மருந்து ஒன்றில் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை கண்டறிந்த நிலையில், மொத்தை மருந்தையும் திரும்பப்பெற குறித்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புகைப்பிடித்தலில் இருந்து விடுபட பயன்படுத்தப்படும் பைசர் நிறுவனத்தின் மிகப் பிரபலமான மருந்து Chantix. தற்போது இந்த மருந்தையே பைசர் நிறுவனம் மொத்தமாக திரும்பப்பெற முடிவு செய்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

இந்த மருந்தில் nitrosamine மற்றும் N-nitroso-varenicline ஆகிய ரசாயனங்களில் அளவு மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், குறித்த மருந்தை திரும்பப்பெற பைசர் நிறுவனம் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், குறித்த மருந்தை உட்கொண்டு வரும் நோயாளிகள், மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் எனவும், அது வரையில் அந்த மருந்தை உட்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தலை கைவிடுவதால் ஏற்படும் நன்மையை விட குறித்த மருந்தால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றே கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடர்புடைய மருந்தில் nitrosamine அளவு அதிகமிருப்பது கண்டறியப்பட்ட பின்னர் பைசர் நிறுவனமானது Chantix மருந்தின் விநியோகத்தை நிறுத்தி வைத்திருந்தது.

தொடர்ந்து ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் Chantix மருந்தினை மொத்தமாக திரும்பப்பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமான FDA கடந்த 2006ல் பைசர் நிறுவனத்தின் Chantix மருந்திற்கு ஒப்புதல் அளித்தது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு குறித்த மருந்தால் புகைப்பிடித்தலை மொத்தமாக கைவிட முடியும் எனவும், 12 முதல் 24 வாரங்கள் வரையில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பைசர் நிறுவனம் ஜூலை 2021ல் வெளியிட்ட ஒரு குறிப்பில், அமெரிக்காவில் புகைபிடிக்காதவர்களை விட சிகரெட் புகைப்பவர்களுக்கு 15 முதல் 30 மடங்கு அதிகமாக நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *