வரலாற்றில் முதன் முறையாக விண்வெளிக்கு சுற்றுலா பயணம்!

அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியது.

விண்வெளி சுற்றுலாத் தொழில் உலகளவில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. அந்தவகையில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தில் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் என்பவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.2413678391~i.1~rp.4&w=412&lmt=1631784508&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fworld%2F36249&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1631784508251&bpp=22&bdt=5177&idt=23&shv=r20210914&mjsv=m202109140101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=8326035195971&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1631784507&ga_hid=1082060132&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=946&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530893%2C44750894%2C31060475%2C31062093&oid=3&pvsid=2753412843406600&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=4s0iWg7bcC&p=https%3A//www.kumudam.com&dtd=110

இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இன்ஸ்பிரேஷன் – 4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் எண்.9 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. 

இந்த விண்கலம் 3 நாட்கள் பூமியை சுற்று வரும். 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பயணம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை இந்த 4 பேரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *