விராட் கோலியின் திடீர் முடிவுக்கு யார் காரணம் கங்குலி விளக்கம்!

இந்திய அணியின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், கோலி விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ஆன கோலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு பின், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இவருக்கு பின் யார் இந்திய அணியின் அடுத்த புதிய டி20 கேப்டன் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவரான கங்குலி கோஹ்லி குறித்து கூறுகையில், கோலி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த மிகப் பெரும் சொத்து. இவர் இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளிலும் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர்களில் ஒருவர், கோலியின் இந்த முடிவு எதிர்காலத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

கோலி டி20 கேப்டனாக இதுவரை சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், அதுமட்டுமின்றி வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், வரும் காலங்களி அவர் ரன்களை குவிப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இது குறித்து கூறுகையில், இந்திய அணியில் எங்களிடம் ஒரு தெளிவான வழிகாட்டல் உள்ளது,. பணிச்சுமையை கருத்தில் கொண்டு, ஒரு சுமூகமான மற்று மாற்றம் இருப்பதை உறுதி செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறுமாதங்களாக இது குறித்து கோலி மற்றும் தலைமை குழுவுடன் ஆலோசித்தேன்.

அதன் பின் இறுதியாக சிந்திக்கப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவு இது, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால போக்கை வடிவமைப்பதில் கோஹ்லி ஒரு வீரராகவும், மூத்த வீரராகவும் தொடர்ந்து பங்களிப்பார் என்று கூறியுள்ளார்.

கோலி டி20 போட்டிகளில் தான் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளாரே தவிர ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் கேப்டனாக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *