ராஜ குடும்பத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

வேல்ஸ் நாட்டில் ’எங்களுக்கு இளவரசர் தேவையில்லை’ என்று கூறும் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேல்ஸ் நாட்டின் தலைநகரான Cardiff, Swansea மற்றும் Aberdare ஆகிய நகரங்களில், இளவரசர் சார்லசின் புகைப்படத்துடன், எங்களுக்கு இளவரசர் தேவையில்லை, ராஜ குடும்ப அரசாட்சி பிரித்தானியாவுக்கு நல்லதல்ல, சுற்றுலாவுக்கும் நல்லதல்ல, ராஜ குடும்பத்தால் பிரித்தானியாவுக்கு ஆண்டொன்றிற்கு 345 மில்லியன் பவுண்டுகள் செலவு, அந்த பணம் 13,000 செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க போதுமானது என்றெல்லாம் கூறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதன் பின்னணியிலிருப்பது Republic என்ற அமைப்பு. ராஜ குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்ற முழக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் பிரச்சாரத்துக்கு இதுவரை 25,000 பவுண்டுகள் நிதி வசூலாகியுள்ளது.

அந்த அமைப்பு பிரித்தானியா மகாராணியாருடன் பிரித்தானியாவில் ராஜ குடும்ப ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகிறது.

ஆனால், இந்த போஸ்டர்கள் வேல்ஸ் மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல என்கிறார்கள் வேல்ஸ் அதிகாரிகள்.

மக்கள் எப்போது இளவரசர் சார்லஸ் மன்னராவார், அவருக்குப் பின் எப்போது இளவரசர் வில்லியம் வேல்ஸ் இளவரசர் ஆவார் என ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள் அவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *