நடிகர் விஜய் காருக்கான நுழைவு வரியை செலுத்தினார்!

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்திவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் விஜய், வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். வணிக வரித்துறை அதிகாரிகளிடம் நடிகர் விஜய், ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு  நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.2413678391~i.1~rp.4&w=412&lmt=1631803874&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fcinema%2F36279&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1631803873909&bpp=25&bdt=3803&idt=27&shv=r20210914&mjsv=m202109150101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=6023196317604&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1631803873&ga_hid=426877589&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=952&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530893%2C44747621%2C31062519%2C31060475%2C31062093&oid=3&pvsid=2211425436318513&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=GpooRkiQtX&p=https%3A//www.kumudam.com&dtd=136

இதனால் நடிகர் விஜய், நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் முறையாக வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்தார். மேலும், நுழைவு வரி செலுத்த வேண்டும் என்றும், வரிவிலக்கு கேட்டதற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்  செய்தார். இந்த வழக்கில், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட கண்டன கருத்துகள் அடங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், விஜய் ஏற்கனவே 20 சதவீதம் நுழைவு வரி செலுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள 80 சதவீதத்தை செலுத்த உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்குபோது, நடிகர் விஜய் செலுத்த வேண்டிய பாக்கி நுழைவு வரியை செலுத்திவிட்டதாக அவரது தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *