தாயை கொன்று விட்டு விடிய விடிய உடல் அருகில் அமர்ந்திருந்த மகன்!

இளைஞர் ஒருவர் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு விடிய விடிய அவரது உடல் அருகே ரத்தத்துடன் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மாத்திக்கேட்டைச் சேர்ந்தவர் சரஸ்வதி(70). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிடவே கடைசி மகன் பழனி(34) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

சரஸ்வதியின் முதல் ஆறு பிள்ளைகள் திருமணமாகி தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கடைசி மகன் பழனி திருமணம் ஆகாமல் தாயுடன் இருந்துள்ளார்.

மருத்துவ விற்பனை பிரதிநிதியாக இருந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயமடைந்ததால், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று வெளியே செல்ல முற்பட்ட பழனியை தாய் தடுத்ததால், ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அருகேயே அமர்ந்துள்ளார். காலை வெகுநேரம் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் அவதானித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே தனது சகோதரி வீட்டிற்கு சென்ற பழனி, ‘அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை‘ என்று ரத்தக்கறை கைகளுடன் சொல்ல, அவர் சந்தேகத்தில் பதறி அடித்து வந்து பார்த்து கதறி அழுதிருக்கிறார்.

பழனியை கைது செய்து பொலிசார் விசாரித்த போது தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாகவும், சடலத்தின் அருகே அமர்ந்திருந்ததாகவும் விசாரணையில் கூறியிருக்கிறார்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *