விண்வெளியில் எத்தனை முறை சூரியன் உதிக்கும் நாசா வெளியிட்ட தகவல்!

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையமாகும். இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். விண்வெளி குறித்து ஒவ்வொரு தகவலும் நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தரும். விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அடிக்கடி அங்குள்ள நிலையை படம் பிடித்து அனுப்பி பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), தொடர்ந்து பூமியை சுற்றி வருகிறது ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது என தகல்கள் வெளியாகி இருக்கின்றன.

சர்வதேச விண்வெளி நிலையம் தினமும் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது என்றும் இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 முறை சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கின்றனர் என நாசா (NASA) தெரிவித்திருக்கிறது.

அதாவது, தினமும் 45 நிமிடங்கள் இடைவெளியில், சூரியம் உதிக்கிறது மற்றும் அஸ்தமனமாகிறதாம். நாசா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த பதிவில், அற்புதமான வீடியோவை வெளியிட்டது. விண்வெளி வீரர்கள் வெப்பநிலை வேறுபாட்டை உணர்கிறார்களா என்று ஆச்சரியப்பட்ட டுவிட்டர் பயனர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. விண்வெளியில் வெப்பநிலை வேறுபாடு மிகப் பெரிய அளவில் இருக்குமாம்.

சூரிய உதயத்தில், வெப்பநிலை 250 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், சூரிய அஸ்தமனத்தில் -250 பாரன்ஹீட் ஆகவும் இருக்குமாம். ஆனால் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருக்கிறார். ஏனெனில் அவர்களின் விண்வெளி உடைகள் வெளிப்புற தட்பநிலை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

விண்வெளியில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் அல்லது விண்வெளியில் நடப்பதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *