கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்த ஆணுறை!

பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறை பயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது

எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தியதற்கான பதிவுகள் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 15 000 வருடங்கள் பழமையான குகை ஓவியத்தில் ஆணுறையின் ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கிமு3000 ஆண்டளவில் நடைபெற்றதாக கூறப்படும் கிரேக்க வரலாற்று சம்பவங்களில் ஆணுறை பயன்பாடு பற்றிய கதை ஒன்று உள்ளது

கிமு 3000 ஆண்டில் கெனோஸிஸ் என்ற நாட்டை மைனோஸ் என்ற மன்னன் ஆண்டுகொண்டிருந்தான் இந்த மன்னருக்கு ஒரு சாபம் இருந்தது இவரது விந்தில் தேளின் விஷம் இருக்கும் என்பதுதான் அது இதன் காரணத்தால் மன்னன் யாருடன் உடலுறவுகொண்டாலும் உடனே அந்தப்பெண் இறந்துவிடுவார் மன்னனின் மகாராணியும் இதன் காரணத்தால் இறந்து விட வாரிசு கிடைக்கவழியில்லையே என்று மன்னன் மிகுந்த துன்பத்தில் இருந்தான்

அப்போது பைஸ்பே என்ற பெண் இதற்கான உத்தியொன்றை கண்டுபிடித்து மன்னருக்கு தெரிவித்தாள் ஆட்டின் சிறு நீர்ப்பையை உடலுறவின் போது பயன்படுத்திக் கொண்டால் பெண்கள் இறக்கமாட்டார்கள் என்பதுதான் அவள்கூறிய யோசனை மன்னன் அந்த யோசனையை அவளிடமே பயன்படுத்தி வரிசையாக 8 பிள்ளைகளுக்கு தந்தையானான் என்பது வேறுகதை

வரலாற்றுக் கதைகளில் ஆணுறை பயன்பாடை உள்ளடக்கிய முதலாவது மிகப் பழமையான கதை இந்தக் கதைதான் ஆனால் ஆட்டின் சிறு நீர்ப்பையை பெண்ணின் குறிக்குள் உறையாகப்பயன்படுத்தப்பட்டதா அல்லது அரசன் அதை ஆணுறையாகப்பயன்படுத்தினானா என்பது இன்னும் விவாதப்பொருளாகவே உள்ளது இருந்தாலும் ஆணுறைப் பயன்பாடு பற்றிய வரலாறு  இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது

அடுத்ததாக ஆணுறைகளைப்பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் இவர்கள் துணிகளை ஆணுறைகளாகப்பயன்படுத்திக்கொண்டார்கள் எதிர்பார்த்ததுபோல் இந்தமுறை அவளவுக்கு பலனளிக்கவில்லையாயினும் இவற்றைத்தான் அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தினார்கள் அதோடு சமூக அந்தஸ்துக்கு ஏற்றவகையில் தமது உடைகளில் வித்தியாசமான நிறங்களை அணிவது எகிப்தியர்களின் வழக்கமாக இருந்தது அதே நிறத்தை ஆணுறைக்கும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்

அடுத்து ஆணுறையைப்பயன்படுத்தியவர்கள் ரொமேனியர்கள் கலை கலாச்சாரம் கட்டிடத்துறை என அனைத்திலும் தமக்குரிய தனித்துவத்துடன் மிளிர்ந்தவர்கள் ரொமேனியர்கள் ஆனால் இவர்களுடைய காலத்திலேயே பாலியல் நோய்கள் பரவ ஆரம்பித்திருப்பதை உணர்ந்துகொண்டார்கள் ரொமேனிய மருத்துவர்கள் இதற்காகவே இவர்கள் ஆணுறைகளை உருவாக்கினார்கள் இவர்கள் துணிகளைமட்டும் பயன்படுத்தவில்லை இறந்தவிலங்குகளின் குடல்களையும் ஆணுறைகளாகப் பயன்படுத்திக்கொண்டார்கள் இறந்தவிலங்குகளின் குடல்களைப்பதப்படுத்தி ஆணுறைகளாக ரொமேனியர்காள் பயன்படுத்திக்கொண்டார்கள்

இவர்ளுக்கு அடுத்தபடியாக காண்டம்களைப் பயன்படுத்தியவர்கள் ஆபிரிக்க பழங்குடியினத்தவர்களான யூக்கா இனத்தவர்கள் இவர்கள் கிரேக்கர்கள் ரொமேனியர்களைப்போல் அல்லாமல் பெண்களுக்காக ஒரு உபகரணத்தை வடிவமைத்தார்கள் சுமார் 6 இஞ்ச் நீளமுடைய ஒரு மரத்தின் தடியைத்தான் பெண்கள் பயன்படுத்தினார்கள் கர்ப்பத்தடைக்காகத்தான் இது பயன்படுத்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *