பாடசாலைகளை திறக்க தீர்மானம் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!

200க்கும் குறைவான  மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார விதிகளுக்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் ஐயாயிரம் பாடசாலைகளை  திறப்பது தொடர்பில்  அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில்  இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை  விரைவில் திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *