குழந்தைகளுக்கு கோழி இரத்தத்தை கொடுக்கும் சீன பெற்றோர்கள்!

குழந்தைகள் திறமையானவர்களாக வளர்க்க வேண்டும் என பெற்றோர்கள் செய்யும் வினோதமான பழக்க வழக்கங்களை சீன மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அப்படி, சிக்கன் பேரண்டிங் முறையை பின்பற்றுகின்றனர். அது ஒரு வினோதமான குழந்தை வளர்ப்பு முறையாகும்.
இதில் பெற்றோர், பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘கோழியின் இரத்தம்’ கொண்ட ஊசியை செலுத்துகிறார்கள். இது, கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஒரே மருந்தாக இருக்கும் என அவர்கள் கருதுவதாக தி சிங்கப்பூர் போஸ்டின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த கோழி இரத்த ஸ்டீராய்டுகள் குழந்தைகளிடம் (Children) உயர் செயல்திறனையும் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகள், கல்வி விளையாட்டு என அனைத்திலும் மிக அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள். இது அவர்களது செயல்திறனை பன்மடங்கு அதிகரிப்பதாக நம்பப்படுகின்றது.
சிக்கன் பேரண்டிங் பாணி அமெரிக்காவில் (America) இருக்கும் “ஹெலிகாப்டர் பேரண்டிங்” போன்றது. இந்த பாணியில் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பள்ளி மட்டும் போதாது, நல்ல மதிப்பெண்கள் மட்டும் போதாது என்ற பரபரப்பிலேயே இருப்பார்கள்.
அனைத்து குழந்தைகளுக்கும் இவை அனைத்தும் கிடைப்பதால் தங்கள் குழந்தைகளை எப்படி தனித்துவமாக காட்டுவது என்று எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இவர்கள்.
இதையடுத்து, சீன இளைஞர்களிடையே மனச்சோர்வு கணிசமாக அதிகரித்துள்ளது என்று SupChina ஊடகத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்தின. 2019-20 தேசிய மனநல மேம்பாட்டு அறிக்கை, சீன இளைஞர்களில் 25 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7.4 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்ததாக, சிங்கப்பூர் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையேம், சீனாவின் குழந்தைப் பருவ மயோபியா விகிதம் உலகின் மிக உயர்ந்ததாக இருப்பதாகவும் அறிக்கைகள் கண்டறிந்துள்ளன. 71 சதவீத நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் 81 சதவீத உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கண் பார்வை கோளாறு இருப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது.