கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் பஷிலின் சலவை இயந்திர நிதிச் சட்டம் நாட்டுக்குத் தேவையா?

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் பஷிலுடைய சலவை இயந்திர நிதிச் சட்டம் நாட்டுக்குத் தேவையா? என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சபையில் தெரிவித்தார்.

கொள்ளைக் கும்பல் நாட்டைச் சூறையாடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வெவ்வேறு வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளிடமும் வெளிவராத இந்தச் சொத்து இருக்கிறது. இது வெளிவருவதில்லை என்றும் எங்கள் நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளிடமும் பாதாள உலகத்திடமும் இந்தச் சொத்து இருக்கிறது என்றும் அனுர தெரிவித்துள்ளார்.

கடந்த 07 ஆம் திகதி நிதிச் சட்ட மூலம் தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சகல கறுப்புப் பணத்தையும் சட்ட ரீதியாக அமுல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுசங்க உயிருடன் இருந்தால் அவர் சேமித்து வைத்துள்ள சொத்துக்கள் சட்ட ரீதியாகப்பட்டிருக்கும். பொட்டன ஒப்பன் உயிருடன் இருந்தால் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னோக்கிக் கொண்டு சென்றிருப்பார்.

வெள்ள சுதா போதைப் பொருள் விற்பனை மூலம் சேமித்து வைத்துள்ள சொத்துக்களைச் சட்ட ரீதியாக்க முடியும் என்றும் அரசியல் வாதிகள் ஒப்பந்தப்பத்திரம் மூலமாக மோசடி செய்து பெற்றுக்கொண்ட சொத்துக்களை சட்ட ரீதியாக அமுல்படுத்த முடியும் என்றும் வியாபாரிகள் வெவ்வேறு சட்டவிரோதமான முறையில் மோசடி ரீதியாக சம்பாதித்த பணத்தை சட்டரீதியாக்க முடியும் என்றும் இந்தச் சட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தால் அந்தச் சட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாது மறுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த சட்டத்தைப் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப் படும். அந்த சட்டத்தை ஏற்பதற்காக அதிகமானோர் கைகளை உயர்த்துவார்கள் ஏனென்றால் அதில் அதிகமானோர் அந்தச் சொத்துக்கு உரிமையாளர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் சகல சொத்து களுக்கும் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அந்த சொத்துகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

புதிய நிதிச் சட்டம் நாட்டின் நற்பெயரையும், மதிப்பையும் கடுமையாகப் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மோசடி செய்பவர்களின் கறுப்புப் பணத்திற்கு ஒட்டுமொத்த நாடும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் பஷிலினுடைய சலவை இயந்திர நிதிச் சட்டம் நாட்டுக்குத் தேவையா? இல்லையா? என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சொத்து தேசிய ரீதியாக நிலமாக, வீடாக மற்றும் வெவ்வேறு முறையில் கிடைக்கும் வருமானமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம் மற்றும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் சொத்தாக இருக்கலாம் என்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் ஏராளமான உள்ளூர் சொத்துக்களை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சொத்துகள் டுபாய்,சுவிஸ் வங்கிக் கணக்குகளில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. எனவே குறித்த சொத்துகளை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கறுப்புப் பணத்தை உள்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு, வெளிநாட்டுச் சொத்துக்களையும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் சொத்துக்களையும் இந்த நாட்டுக்கு கொண்டுவந்து சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தி வெள்ளைப் பணமாக மாற்ற முடியும் என்றும் வெளிநாட்டு கறுப்புப் பணத் தைச் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தி வெள்ளைப் பணமாக மாற்ற முடியும் என்றும் இது தான் பஷிலினுடைய சலவை இயந்திர நிதிச் சட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொள்ளைக் கூட்டத்தினர் கடலைச் சூறையாடியது போன்று நாடு கொள்ளைக் கூட்டத்தினரால் சூறையாடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *