அமெரிக்க கிரீன் கார்ட் விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு ஒரு நற்செய்தி!

கிரீன் கார்டு தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டமொன்று நிறைவேற்றப்பட உள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்காவின் குடியேற்ற சட்ட நிறுவனத்தின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில், அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து கிரீன் கார்ட் பெறுவதில் நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் 5000 அமெரிக்க டொலர்களை கூடுதலாக செலுத்தி விண்ணப்ப வரிசையில் முன்னேறி விரைவாக கிரீன் கார்ட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

‘எச் – 1பி விசா’ வைத்திருப்பவர்களும், தங்களின் வயது வரம்பு முடியும் தருவாயில் இருந்தாலும் அல்லது முடிந்து இருந்தாலும் புதிய சட்டம் அமுலான பின் கூடுதலாக பணம் செலுத்தி கிரீன் கார்ட் பெறலாம் என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்தின் அறிவிப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு மூலம் கிரீன் கார்ட் பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில் விண்ணப்ப சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் தகுதியானவர்களை பரிசீலித்து கிரீன் கார்ட் வழங்கப்படுகிறது.

இந்த பணிகளை இன்னும் வேகப்படுத்தவே புதிய திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரீன் கார்ட் பெற விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப வரிசையில் முன்னேறுவதற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள Reconciliation Bill இன் ஒரு பகுதியாக supplemental கட்டணத்தை அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதத்திற்கு அதிகமாக விசா அளிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வருடமும் 1.40 இலட்சம் விண்ணப்பத்தை ஒதுக்கி வைத்து வருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் supplemental கட்டணம் மூலம் விண்ணப்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, அதேபோல் தகுதியான அனைவரும் கிரீன் கார்ட் பெறலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த திட்டம் குறித்து விரைவில் முடிவு வெளியாகும் எனவும், இது அமெரிக்க அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டித் தரும் திட்டம் என்பதால் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் என நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

கிரீன் கார்டு என்றால் என்ன

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்றுவதற்கு கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது.

இந்த கிரீன் கார்டை பெறுவதற்காக தொழில்நுட்பத் துறையினர், மருத்துவர்கள் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடும் போட்டி இருப்பதால் கிரீன் கார்டுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்றனர். வெளிநாட்டினர் பலருக்கும் கிரீன் கார்ட் எளிதாக கிடைப்பதில்லை.

அமெரிககாவின் கிரீன் கார்ட் கிடைப்பதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகிறது.

அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டப்பிடி ஒரு நிதியாண்டில், ஒரு நாட்டுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையிலேயே கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *