ஏலியன்களால் வேலை, திருமண வாழ்வை இழந்த அமெரிக்க நபர்!

ஏலியன்களால் தன் திருமண வாழ்வையும் வேலையையும் இழந்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்கர் ஒருவர்.

ஏலியன்களைக் குறித்த கதைகள் பல கேட்டிருக்கிறோம். குறிப்பாக அமெரிக்காவில் ஏலியன்கள், பறக்கும் தட்டுக்கள் குறித்து உலவும் கதைகள் அதிகம். இந்நிலையில், அமெரிக்கர் ஒருவர் தான் பல முறை ஏலியன்களால் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Steve Colbern என்ற அந்த நபர், தன் வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு பறக்கும் தட்டு வந்ததாகவும், அதிலிருந்து தோன்றிய பச்சை நிற ஒளி தன்னை இழுத்துக்கொண்டதாகவும், தன்னை ஆய்வகம் போன்று காட்சியளிக்கும் ஒரு அறைக்குள் கொண்டு சென்ற ஏலியன்கள், தன்னை ஒரு படுக்கையில் படுக்கும்படி கூறியதாகவும் தெரிவிக்கிறார்.

ஒரு நீண்ட கருவியின் மூலம் அவை தன் கையில் நானோ சிப் ஒன்றை பொருத்தியதாக தெரிவிக்கும் Steve, அதன் பின் தன் வாழ்வே மாறிப்போனதாக தெரிவிக்கிறார். முழுமையாக அதற்குப் பின் ஏலியன்கள் குறித்த ஆய்வுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார் Steve.

ஆனால், தன் மனைவிக்கு அந்த விடயம் பிடிக்கவில்லை என்றும், அதனால் தங்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும் தெரிவிக்கிறார் Steve.

இதற்கிடையில், தன் உடலில் பொருத்தப்பட்ட சிப் குறித்து ஆராய்வதற்காக அலுவலகத்திலுள்ள கருவிகளை பயன்படுத்தியதால், அவர் பணியாற்றிய நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் Steve

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *