பாப்பரசரை சந்திக்காமல் நாடு திரும்பவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உம் சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்க இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பாப்பரசர் சந்திக்காது சில நாட்களில் பிரதமர் உள்ளிட்டவர்கள் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் இருவரும் இத்தாலிக்கான விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்துவதாகவும் அதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின்முன்னேற்றம் தொடர்பாக பாப்பரசருக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன் இந்த விடயம் அமைச்சரவை ஊடகவியலாளர்சந்திப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பாக கடுமையான எதிர்ப்பைபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த பொய்யான தகவல்களையும்தவறான விளக்கங்களையும் கூறுவதற்கு பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் இத்தாலி சென்றுபாப்பரசரை சந்திக்கப்போவதாகவும் அதற்கு அனுமதிக்க முடியாது என்றும் கர்தினால் ஆண்டகை பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் பாப்பரசரை சந்திக்க கடும் முயற்சிகளை மேற்‍கொண்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகளை வத்திகானுடன் நெருக்கமாகச்செயற்படும் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் ஊடாக அரசாங்கம் முயற்சித்திருந்தது.

எனினும், அந்த முயற்சிகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டிருந்தபோதும் கர்தினாலின் கூற்றினால் இலங்கை பிரதிநிதிகளை சந்திப்பதற்கு வத்திக்கான் பச்சைக்கொடி காட்டவில்லை என கூறப்படுகின்றது. இதனால் தமக்கு ஏற்பட்ட பின்னடை அரசாங்கம் கனகச்சிதமாக மறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தது.

அதற்காக, பிரதமர் மஹிந்த பாப்பரசரை சந்திக்கும் விடயம் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கவில்லை என்ற கதையொன்றை ஊடக அறிவிப்பின்மூலம் வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும் தற்போது இத்தாலியில் இருக்கும் பிரதமர் மஹிந்தமற்றும் பாரியார் உள்ளிட்டவர்கள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர் நாடு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *