முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் நடிகை குஷ்பு!

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம்வந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த முன்னணி கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.

மேலும், சின்னத்திரையில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், லட்சுமி ஸ்டோர்ஸ் எனும் சன் டிவி நாடகத்திலும் நடித்திருந்தார். அரசியலிலும் பிரபலமாக இருந்த அவர், சமீபத்தில் நடத்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

நட்சத்திர வேட்பாளராக பார்க்கப்பட்ட குஷ்பு அங்கு தோல்வியை தழுவினார். தேர்தலுக்குப் பிறகு ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து விலகியே இருந்தார். அவ்வப்போது டிவிட்டரில் மட்டும் கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில், மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ள நடிகை குஷ்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே, குஷ்பு சில வாரங்களுக்கு முன்பு தனது அற்புதமான உடல் மாற்றத்தின் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனில் குஷ்பு தனது உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆரோக்கியமான உணவு மற்றும் ஒர்க் அவுட் மூலம் தனது உடல் எடை இழப்பு பயணத்தை இவர் மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டார். அதன்மூலம் தனது உடல் எடையில் 14 கிலோவைக் குறைத்து தற்போதைய இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு செம அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கிறார். குஷ்பூ தனது டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சார்ய படுத்தியிருந்தார்.

தற்போது இவர் கலர் தமிழ் தொலைக்காட்சியில் இந்த மாதம் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-வில் ஜட்ஜாக பங்கேற்கிறார். அவருடன் தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் பிருந்தா கோபாலும் நடுவராக இருக்க போகிறார். தனது வரவிருக்கும் ரியாலிட்டி ஷோவை காண மிக ஆவலுடன் இருக்கும் நடிகை, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியின் தொகுப்புகளில் இருந்து எடுத்துக்கொண்ட சில போட்டோக்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிகப்பு நிற புடவையில் நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.

அவரின் இன்ஸ்டா பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த ரசிகர்களில் ஒருவர், இளமை திரும்புதே என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பலர் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 90-களின் நடிகை இப்போதுள்ள முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுப்பார் போல, அந்தளவுக்கு தனது அழகை கூறியிருக்கிறார் நடிகை குஷ்பு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *