ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உழைப்பவர்களுக்கு 5% வரி

இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி ,இந்த வரி கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு பயன்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் , ஏராளமான இலங்கையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து அதற்காக பணம் செலுத்துகின்றனர்.

அதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள்.

மேலும் ,அவர்களும் உரிய வரி செலுத்த வேண்டுமா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *