கொழுப்பு களனி பாலத்தின் புதிய தோற்றம்!

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய களனி பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண மின் விளக்குகள் நேற்று இரவு ஒளிரச் செய்யப்பட்டன. இது கொழும்பின் அழகினை மேலும் மிளிர செய்கிறது. இது இலங்கையில் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் பாலமாகும்.

புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளையும், புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கத்தையும் அழகுபடுத்துவதற்கு தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகள் நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகியவற்றை நடுவதற்கு முன்மொழிந்துள்ளனர். அத்துடன் தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பை உருவாக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *