17 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி!

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடந்த 2003-04-ம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. பாகிஸ்தான் நடத்தும் தொடரை இரு அணிகளும் பொது இடமான யு.ஏ.இ.யில் இரு அணிகளும் விளையாடி வந்தன.

இந்த நிலையில் 2004-க்கும் ஆண்டுக்குப்பின் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி வருகிற 17-ந்தேதி நடக்கிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது போட்டி 21-ந்தேதியும் நடக்கிறது. அதன்பின் செப்டம்பர் 25-ந்தேதி முதல் அக்டோர் 3-ந்தேதி வரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் ராவல்பிண்டியிலும், டி20 கிரிக்கெட் தொடர் லாகூரிலும் நடக்கிறது.

பொதுவாக தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உள்நாட்டு நடுவர்களை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக சில அனுபவம் குறைந்த நடுவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளை கொடுத்து விடுகின்றனர். நடுவர்கள் முடிவில் பேட்ஸ்மேன்கள் அல்லது பீல்டிங் செய்யும் அணிக்கு சந்தேகம் ஏற்பட்டால் டி.ஆர்.எஸ். முறை மூலம் 3-வது நடுவரிடம் முறையிடலாம். இதனால் நடுவர் அவுட் கொடுத்த போதிலும், டி.ஆர்.எஸ். மூலம் அந்த முடிவு திரும்பப்பெற வாய்ப்புள்ளது.

ஆனால் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் டி.ஆர்.எஸ். முறை கடைபிடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொடரில் டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்த ஐ.சி.சி.யிடம் அனுமதி பெற வேண்டுமாம். போட்டியை நடத்தும் அணி, ஒளிபரப்பு உரிமம் பெற்ற நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடைசி நேரத்தில் நியூசிலாந்து தொடருக்கான உரிமத்தை விற்றுள்ளது. இதன்காரணமாக டி.ஆர்.எஸ்.-க்கு அனுமதி பெற முடியவில்லையாம்.

ஆகையால், இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். ஒருவேளை நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டாலும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அதுபோல் பந்து பேட்டில் உரசிச் சென்று நடுவர் கவனிக்காமல் விக்கெட் கொடுக்காமல் இருந்துவிட்டால், அது பந்து வீச்சாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *