கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் ரூபா 250 கோடி நட்டமாம்!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருக்கிறது. மான்செஸ்டரில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது போட்டி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் 4-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 59 வயது ரவிசாஸ்திரிக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஐந்தாவது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்தின் கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் வேறு நாளில் நடத்துவது குறித்து விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையிலான இந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு (WCB) சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *