பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான FORD உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவிப்பு!

அமெரிக்காவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கார் உற்பத்தி செய்து வந்தது.இந்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள மறைமலைநகர்
குஜராத்திலுள்ள சனண்ட் ஆகிய இரண்டு இடங்களிலும் உற்பத்தியை நிறுத்த விரும்புவதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில்
கார் உற்பத்தி செய்வதை நிறுத்திய நிலையில், போர்டு நிறுவனமும் தனது உற்பத்தியை நிறுத்துவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளது
போர்டு நிறுவனம் ஏற்கனவே ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஆலைகளை மூடிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள ஆலையையும், குஜராத் மாநிலம்

சனந்தில் உள்ள ஆலையையும் மூட முடிவு செய்துள்ளதகவும்,ஏற்றுமதிக்காக எஞ்சின் உற்பத்தி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்

எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அந்த நிறுவனத்தை நம்பி உள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *