பிட்காயினை அங்கீகரித்த முதல் நாடாக சால்வடோர் பதிவானது!

உலகின் முதன் முறையாக பிட்காயினை எல் சால்வடோர் என்னும் நாடு அங்கிகரித்துள்ளது.

மத்திய அமெரிக்காவில் இருக்கும் El Salvador என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது.

இந்த நாட்டில், அமெரிக்க டொலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தபடும் என்று தெரிவித்துள்ளது.

பிட்காயினின் நிலையற்றத் தன்மையாலும், பாதுகாப்பற்றத் தன்மையாலும் பல நாடுகளும் அதை பரிமாற்ற நாணயமாக அங்கீகரிக்க தயக்கம் காட்டி வருகிறது.

ஆனால், இது போன்ற சூழ்நிலையில், El Salvador அரசு, பிட்காயினை அங்கீகரித்துள்ளது. ஆரம்பத்தில் பிட்காயினை நடைமுறைக்கு கொண்டு வர, பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் நிலவி வந்தன.

ஆனால், அதை எல்லாம் தற்போது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், இதன் காரணமாகவே பிட்காயின் பரிமாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *