தந்தையின் செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக பில்லேடன் மகன் தெரிவிப்பு!

மறைந்த தந்தையின் செயல்பாடுகளுக்கு தாம் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ள ஒசாமா பின்லேடனின் மகன் இஸ்ரேலில் குடியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் ஒமர் பின்லேடன் இதை தெரிவித்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பின்னர் அல் கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்புக்கு வர எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் தாம் அதை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளைகளை விரும்புவதை விட தந்தை பின்லேடன் தமது எதிரிகளை தீவிரமாக வெறுத்தார் என தெரிவித்துள்ள ஒமர், அல் கொய்தா அமைப்பில் இணைந்திருந்த காலங்கள் முட்டாள்த்தனமானது எனவும், வாழ்க்கையை வீணடித்ததை தாம் உணர்ந்ததாவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமும் தமது சகோதரரும் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தல் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பாரிஸ் நகரில் வசித்து வரும் ஒமர் பின்லேடன், மிக விரைவில் தமது மனைவியுடன் இணைந்து இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருமுறையேனும் அமெரிக்கா சென்று சுற்றிப்பார்ப்பது தமது கனவு எனவும் ஒமர் பின்லேடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011ல் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க சிறப்பு ராணுவ வீரர்கள் கொன்றதுடன், உடலை கடலுக்கடியில் புதைத்ததாக அறிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *