வனிதாவாக மாறிய நடிகை அம்பிகா!

வெள்ளித்திரையில் 80 மற்றும் 90களில் கோலோச்சிய அம்பிகா, கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’திருமதி ஹிட்லர்’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அவர், தற்போது சன் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் திடீர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த சீரியலில் வனிதா என்ற மூத்த அரசு அதிகாரி கதாப்பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் அவர் நடிக்கிறார். 

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘அன்பே வா’ சீரியலில் நடித்தது புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

“அன்பே வா டீம் ஒரு ஜாலியான டீம். அந்த டீமில் இணைந்தது நடித்தது சூப்பராக இருந்தது. வனிதா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். என்னுடன் நடித்த எல்லோரும் சூப்பரான, திறமையான நடிகர்கள். என்னுடைய பேவரெட் நடிகர் குமார்” என கூறியுள்ளார். 

அன்பே வா சீரியல் சன் டீவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களின் வரிசையில் முன்னணி இடத்தில் இருக்கும் சீரியல். இந்த சீரியல் கடந்த 2020 நவம்பர் 2-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இயக்குநர் சிவா, இந்த சீரியலை இயக்குகிறார். ரதி பாலா வசனமும், ராஜாஷ்ரி என் ராய் திரைக்கதையும் எழுதுகின்றனர். விறுவிறுப்பும், அதிரடி திருப்பங்களும் அதிகம் இருப்பதால், ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது.

நடிகை டெல்னா டேவிஸ், பூமிகா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடிக்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்த விராட் ஹீரோவாக நடிக்கிறார். அப்பா இல்லாமல் தாய் அன்னலட்சுமியின் மற்றும் கார்த்திகா, தீபிகா ஆகிய இரு சகோதரிகளுடன் பூமிகா வாழ்கிறாள்.

பணக்கார குடும்பத்தை சேர்ந்த வருண் எப்போதும் கலகலப்பாக இருக்கிறார்.

இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்படும் மோதல், காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்கிறது.

தற்போது திருமணமாகி வருண் வீட்டில் வசித்து வரும் பூமிகா, மாமியார் உள்ளிட்டோரால் கடுமையான மன உளைச்சலையும், கொடுமைகளையும் எதிர்கொள்கிறாள். அவளுடைய பிரச்சனைகளை தெரிந்து கொள்ளும் மூத்த அரசு அதிகாரியாக வரும் வனிதா (அம்பிகா), அவளுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறார்.

வனிதா கதாப்பாத்திரத்தில் வருகையால் கதையில் புதிய சுவாரஸ்யமும், டிவிஸ்டும் ஏற்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இவ்வளவு நாள் கொடுமைகளை அனுபவித்து வந்த பூமிகா, வனிதா உதவியுடன் அவர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *