வாட்ஸ்அப்பில் Status & Last Seen அம்சங்களுக்கு விஷேடமாக விரைவில் புதிய வசதி அறிமுகம்!


பேஸ்புக்கிற்கு சொந்தமான உடனடி செய்தி தளமான வாட்ஸ்அப், அதன் பயனர்களுக்கு புதிய அம்சங்களை அடுக்கடுக்காக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், அடுத்து புதியதாக ஒரு அம்சம் அறிமுகம் ஆகவுள்ளது. அந்த புதிய அம்சத்தில், பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ், last seen மற்றும் profile picture ஐ தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புகளுக்கு மட்டும் காட்டும் வகையிலும், மற்றவர்களுக்கு காண்பிக்காத வகையிலும் மறைத்து வைத்துக்கொள்ள முடியும்.

தற்போதுவரை, No one, everyone மற்றும் Only contacts ஆகிய மூன்று விருப்பங்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும், தொடர்புப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து இந்த அம்சங்களை மறைக்க பயனர்களுக்கு ஆப்ஷன் ஏதும் இல்லை.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த அம்சம் இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மற்றும் iOS பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த புதிய தனியுரிமை அமைப்பு மாற்றத்துடன், பயனர்கள் தங்களின் last seen, profile picture மற்றும் status ஆகியவற்றில் தங்களுக்கு ஏற்ற ஒன்றை நான்கு விருப்பங்களில் தேர்வு செய்து கொள்ளலாம். ‘My Contacts Except’ என்ற விருப்பம் Settings இல் நான்காவது விருப்பமாக சேர்க்கபடும். இதன் மூலம், பயனர்கள் தங்களின் last seen ஐ குறிப்பிட்ட தொடர்புகளுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையில் மறைத்துக்கொள்ள முடியும்.

இப்போதைக்கு, இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் வளர்ச்சி மற்றும் சோதனை பணிகளில் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் இந்த அம்சத்தை அனைத்து பயனர்களுக்கும் வெளியிடவில்லை. இது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *