பொறுப்பை தட்டிக் கழிக்கின்ற ஒவ்வொரு நொடியும் மரணம் எங்களை நெருக்குகிறது!

கோவிட் வைரஸிற்கு இரண்டு வயது அண்மிக்கின்ற தருவாயில், முழு உலக நாடுகளும் கோவிட்  என்ற அச்சத்திலிருந்து மீளமுடியாது தத்தளித்துக்கொண்டிருக்கின்றன.

இலங்கையின் நிலைமையோ நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவே தெரிகின்றன. மரணங்கள் 200 ஐ தாண்டியே பதிவாகின்றன. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் சில நேரங்களில் கோவிட் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றதையும் காணக் கூடியதாகவுள்ளது.

கோவிட் தொற்றின் ஆபத்து அதிகரித்தால் நாட்டை முடக்குமாறு பொது மக்களாகிய நாங்களும் கோரிக்கைவிடுக்கின்றோம். நாடு முடக்கப்பட்டால் சில நேரங்களில் நாங்களும் எங்களுடைய பொறுப்பை தட்டிக்கழிக்கின்றோம் என்பதை மறுக்கமுடியாது.

நாடு முடக்கப்பட்டிருக்கும்போது அன்றாட ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகுவதால் அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக வீடுகளை விட்டு வெளியே வரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகின்றன.

ஒரு பக்கத்தில் அரசாங்கம் தங்களுடைய பொறுப்பை நிறைவேற்றத்தவறும் போது நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மறுப்பக்கத்தில் அரசாங்கம் பொறுப்பை நிறைவேற்றும்போது பொது மக்களாகிய நாங்கள் பொறுப்பை தட்டிக்கழின்றோம்.

அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கும்போது நாங்கள் அதனை தவறாக பயன்படுத்துகின்றோம் என்பது மனசாட்சியின்படி ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகவுள்ளது.

கோவிட் கட்டுப்பாட்டுக்கு பொது மக்களாகிய எங்களுடைய ஒத்துழைப்பு இன்றியமையாதது. அரசாங்கம் நாட்டை பற்றி சிந்தித்து செயற்படுவது போன்று, நாங்கள் எங்களையும் எங்களுடைய குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியதும் இன்றியமையாதது.

சில தரப்பினர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக சட்டத்திட்டங்களை மீறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் சிலர் எவ்வித தேவைகளுமின்றி அநாவசியமாக வெளியில் நடமாடுவதையும் காணக்கூடியாக இருக்கின்றது. பொறுப்பற்ற வகையில் இவ்வாறு செயற்படும் ஒரு சில தரப்பினரினால் முழு சமுதாயமும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *