உலகின் மிகவும் தனிமையான வீடு!



உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, தனிமைப்படுத்தலின் உண்மையான அர்த்தத்தை மக்களுக்கு புரிய வைத்துள்ளது. தற்போது சமூகத்திலிருந்து விலகி தொலைதூரத்தில் இங்கிலாந்து மக்கள் வசிக்க விரும்பி வருகின்றனர்.

தற்போது, தனியாக இருக்கும் வீடுகளை வாங்க இங்கிலாந்து மக்கள் வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது. இதனால், வீட்டின் விலையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல, உலகின் மிகவும் தனிமையான வீட்டின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்கிடாவ் ஹவுஸ் மக்களின் மனதை ஈர்த்துள்ளது. இந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டுமானால் 4 கிமீ தூரம் வரை பயணிக்க வேண்டுமாம்.

அந்த அளவிற்கு இந்த வீடு வெறிச்சோடி காணப்படுகிறது. அதாவது இந்த வீட்டைச் சுற்றி நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு கடைகள் கூட கிடையாது. இந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரரோ எதிர்வீட்டுக்காரரோ கூட கிடையாது. இந்த வீட்டில் மின்சாரமோ அல்லது எரிவாயு வசதியோ இல்லை . இதனால், இணையதளம், இண்டன்நெட் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

சமையலுக்கு மர அடுப்பு தான் உபயோகப்படுத்த வேண்டும. மின்சாரத்திற்காக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இந்த வீட்டின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 200 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டை வாங்க 15 கோடி ரூபாய் வரை கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *