நியூசிலாந்தில் இலங்கையர் எப்படி வந்து தாக்குதல் நடத்தினார்?

நியூசிலாந்தில் இலங்கையர் நடத்திய தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்த விபரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருக்கும் LynnMall-ல் இலங்கையர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்தனர். இதில் மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விவரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளது. அதில், இந்த கத்தி குத்து சம்பவம் காரணமாக முதலில் ஆறு பேர் காயமடைந்திருந்ததாக கூறியிருந்தோம்.

ஆனால், தற்போது இன்னொரு நபரும் இந்த கத்தி குத்து தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் காயங்கள் இல்லை. 29, 43, 60 மற்றும் 66 வயது மதிக்கத்தக்க நான்கு பெண்களும், 53, 57 மற்றும் 77 வயது மதிக்கத்தக்க நான்கு ஆண்களும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ள மூன்று பேர் Auckland City மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்து ஒருவர் இதே மருத்துமனையிலும், மற்ற மற்ற இரண்டு பேர் Middlemore மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பொலிஸ் கமிஷ்னர் Andrew Coster கூறுகையில், LynnMall, சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்திய இலங்கையர் இரயில் மூலம் சரியாக உள்ளூர் நேரப்படி 2.30 மணிக்கு வந்துள்ளான்.

கண்காணிப்பு குழுவினர் அவனைத் தொடர்ந்து கண்காணித்தபடியே இருந்தனர். சூப்பர் மார்க்கெட்டிற்குள் செல்லும் பத்து நிமிடம் முன் வரை கண்காணிப்பிலே தான் இருந்தான். உள்ளே செல்லும் போது கூட, ஒரு சாதரண நபர் ஷாப்பிங் செய்வதற்கு என்ன செய்வாரோ, அது போன்று சூப்பர் மார்க்கெட்டில் இருந்த தள்ளுவண்டியை எடுத்துச் சென்றார்.

அதன் பின் சுமார் 10 நிமிடம் வரை அங்கு ஷாப்பிங் செய்வது போன்று பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த கத்தியை எடுத்து அவர் 60 முதல் 90 வினாடிகளுக்குள் கத்தி குத்து சம்பவத்தை அரங்கேற்ற, கண்காணித்து வந்த பொலிசார், உடனடியாக துணிச்சலுடன் உள்ளே நுழைந்து சுட்டு கொன்றுவிட்டனர்.

தாக்குதல் நடந்த சூப்பர் மார்க்கெட் New Lynn பகுதியில் பொலிசார் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து இருப்பார்கள் என்பதை இப்போது சொல்லிக் கொள்ள வ் இரும்புகிறேன். அங்கு விசாரணை மற்றும் பொலிசார் அவ்வப்போது ரோந்து பணியில் இருப்பார்கள்.

இந்த சம்பவம் குறித்து எவரும் பார்த்திருந்தால், பொலிசாரிடம் தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் உடனடியாக 105-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருந்தால், பொலிசாருக்கு கொடுத்து உதவுங்கள், அது விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *