இலங்கையில் தற்போது உள்ள நடைமுறையால் மரண எண்ணிக்கை அதிகரிப்பு அபாயம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள இறுக்கமற்ற ஊரடங்கு நடைமுறையால் எதிர்வரும் வாரங்களில் நாளொன்றுக்கு 10,000 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர், மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நடைமுறைகளால் மாதம் ஒன்றுக்கு 10,000 கோவிட் மரணங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெற்காசியாவில் இலங்கை மரண வீதத்தில் முன்னிலையில் இருப்பதாகவும்,இலங்கை எச்சரிக்கை நிலை நான்கில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எச்சரிக்கை நிலை நான்கு என்பது முழு இலங்கையும் சிவப்பு வலயமாகியுள்ளது.தொற்று சமூகப் பரவலை அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும், ஆனால் இப்போது அத்தியாவசியத் தேவை என்ற பெயரில் அனைவரும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த முடக்கத்தால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *