நான் கதாநாயகன் ஆனது ஏன்? நடிகர் சூரி விளக்கம்!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி ‘விடுதலை’ படத்தில் கதாநாயகனாகி இருக்கிறார். இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தனது படங்கள் குறித்து விளக்கமளித்துள்ள சூரி, “இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆதரவால் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறேன். காமெடியனாக பேர் வாங்க விரும்பினேன். அது நடந்தது.

கதையின் நாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் பல ஆண்டுகளாக வந்தும் காமெடியனாக நடித்து மக்களிடம் கிடைக்கும் ஆதரவைத் தவறாக பயன்படுத்தி விடக்கூடாதே என்று தவிர்த்து வந்தேன்.

கதாநாயானாக களம் இறங்கும் போது நம் நடிப்பை வெளிக் கொண்டு வரும் கதையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

அப்படிப்பட்ட கதைக்காக காத்திருந்தேன். அது இயக்குநர் வெற்றிமாறன் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

வெற்றிமாறன் என்னை கதாநாயகனாக அறிமுகம் செய்ய என்னிடம் கேட்டுக்கொண்ட ஒரே விஷயம், “உங்கள் உடலை கட்டுக்கோப்பாக பராமரித்துக் கொள்ளுங்கள்” என்பதே.

அவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததே கனவு போல இருந்தது. உடனே அட்வான்சை கொடுத்தார். படம் சிறப்பாக தயாராகி வருகிறது.

இதேபோல் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய பாக்கியம்.

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் நடிக்கிறேன். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. சொந்த பந்தமும் அவசியம் என்பதை உணர்த்திவிட்டது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *