கொழும்பில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ,மாவட்ட ரீதியாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்கள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய , கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் 77 ஆயிரத்து 633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் , களுத்துறை மாவட்டத்தில் இதுவரையில், 43 ஆயிரத்து 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூன்று மாவட்டங்களை தொடர்ந்து காலி மாவட்டத்திலேயே அதிகளவானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதன்படி, காலி மாவட்டத்தில் இதுவரையில் 22 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *