இலங்கையில் கோவிட் மரணங்கள் சடுதியாக அதிகரிப்பதற்கான காரணம் வெளியானது!

கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 85 வீதமானவர்கள் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகளவில் கோவிட் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 13ம் திகதி வரையில் பதிவான 6985 மரணங்களில் 85 வீதமானவர்கள் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 2261 பேர் நீரிழிவு நோய்களினாலும், 2202 பேர் உயர் குருதியழுத்தம் காரணமாகவும், 1001 பேர் இருதய நோய்களினாலும், 800 பேர் சிறுநீரக நோய்களினாலும், 445 பேர் ஆஸ்துமா நோய்களினாலும் உயிரிழந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ரஞ்சித் பட்டுவன்துவ இந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 53 வீதமானவர்கள் நீரிழிவு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *