இலங்கையில் தீவிரம் அடையும் கொவிட் பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை!

இலங்கையில் கொவிட் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முக்கிய தீ்ர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கொவிட் தொற்று தொடர்ந்து பரவினால் அடுத்ததாக மேற்கொள்ளப்படவுள்ள சுகாதார நடவடிக்கைகளை பரிந்துரைப்பதக்காக விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார பிரிவுகளின் பிரதானிகளுக்கு அறிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாதென பொலிஸ் ஊடக பேச்சாளர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தடுப்பூசி பெறுவதனை நிராகரிக்கும் நபர்கள் தொடர்பில் எதிர்வரும் கடுமையாக நடவடிக்கை மேற்கொளள்ப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா மாறுபாடு மிகவும் அபாயமிக்கது. அது மிகவும் வேகமாக பரவும் என்பதனையும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இதனை நாட்டு மக்கள் நினைத்தால் மாத்திரமே நிறுத்த முடியும். இதனால் அத்தியாவசிய காரணங்களின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
முகக் கவசம் இல்லாத நபர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் சுய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்