மொடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

ஜப்பான் நாட்டில் மொடர்னா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் இறந்துவிட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜப்பான் நாட்டுக்கு வந்த மூன்று பேட்ச்சில், ஒரு பேட்ச்சில் இருந்த தடுப்பூசி பாட்டில்களில் சில துகள்கள் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேட்ச்சிகளிலும் இருந்த தடுப்பூசிகள் செலுத்துவதை ஜப்பான் அரசு, கடந்த வியாழக்கிழமை அன்று நிறுத்திவிட்டது.
உயிரிழந்த இருவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இந்த மாதத்தின் இரண்டாவது டோஸ் மாடர்னா தடுப்பூசி போடப்பட்ட சில நாட்களுக்குள் இறந்துவிட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டாவது டோஸைப் பெற்ற மறுநாளே இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், காய்ச்சலைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.