கொவிட் மரணங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில்!

நாட்டில் இரண்டாவது நாளாகவும், நாளாந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை, 200ஐ கடந்துள்ளது.

அதற்கமைய, நேற்று மொத்தமாக 214 கொவிட்-19 மரணங்கள பதிவாகியுள்ளன.
இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும்,  30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 58 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட 151 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 8, 371 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் கொவிட் மரணங்களின் சதவீதமானது, 2.01 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச தரவுகளின் அடிப்படையில், நேற்றைய நாளில் கொவிட் மரணங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் உள்ளது.

நேற்றைய நாளில், சர்வதேச ரீதியில் அமெரிக்காவில் அதிக கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. 1,275 இற்கும் அதிகமான மரணங்கள் அங்கு பதிவானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக ரீதியில் நேற்றைய நாளில், 9, 800 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, சர்வதேச கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 97 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *