கிறிஸ்தவ மதப்போதகராக மாறிய பிரபல தமிழ் நடிகை!

திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, தமிழ் நடிகை திடீரென்று ஒரு மத போதகராக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை மோகினி 1991 ஆம் ஆண்டு’ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தில் அறிமுகமானார். அப்போதிருந்து, அவர் ’நாடோடி பாட்டுக்காரன்’ ’சின்ன மருமகள்’ ’உடன்பிறப்பு’ ’புதிய மன்னர்கள்’ ’ஜமீன் கோட்டை’ ’தாயகம்’, மற்றும் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் ஈடுபட்டுள்ளார்

நடிகை மோகினி அமெரிக்க தொழிலதிபரை மணந்து 1999 ல் அமெரிக்காவில் குடியேறினார். அவருக்கு அனிருத் மற்றும் அத்வைத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்
இந்நிலையில் நடிகை மோகினி திடீரென மத போதகராக மாறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ​​”எனது குடும்ப வாழ்க்கை நன்றாக நடந்து கொண்டிருந்தபோது, ​​திடீரென சில நிகழ்வுகளால் நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். தற்கொலை எண்ணமும் வந்தது. இதை தீர்க்க முடியவில்லை. இந்த சமயத்தில் நான்கிருஸ்தவ மத போதனைகளில் ஈடுபட்டேன். அப்போது எனக்கு நிம்மதி கிடைத்தது. நான் இதைத் தொடர்கிறேன். கிறிஸ்தவ மக்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் வேலையைச் செய்வேன். அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *